விஷாலின் ‘சண்டக்கோழி 2’ படத்துக்காக கீர்த்தி சுரேஷ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

பிரபல நடிகை மேனகாவின் மகள் தான் கீர்த்தி சுரேஷ். ஆரம்பத்தில் சில மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த கீர்த்தி சுரேஷ், ‘கீதாஞ்சலி’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அவதாரம் எடுத்தார். தமிழில் கீர்த்தி சுரேஷ் அறிமுகமான படம் ‘இது என்ன மாயம்’ தான் என்றாலும், அவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி தந்தது ‘ரஜினி முருகன்’ மற்றும் ‘ரெமோ’ ஆகிய இரண்டு படங்களும் தான்.

அதன் பிறகு கீர்த்தி சுரேஷுக்கு அடித்தது ஜாக்பாட். அவரின் கால்ஷீட் டைரியில் ‘பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சீமராஜா, சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2, சர்கார், பெண்குயின், அண்ணாத்த, சாணிக் காயிதம்’ என படங்கள் குவிந்தது. கீர்த்தி சுரேஷ் நேரடி தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

இப்போது கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தமிழில் ‘மாமன்னன்’, தெலுங்கில் ‘போலா ஷங்கர், தசரா’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. கீர்த்தி சுரேஷின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘சண்டக்கோழி 2’.

விஷால் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான லிங்குசாமி இயக்கியிருந்தார். தற்போது, இந்த படத்துக்காக நடிகை கீர்த்தி சுரேஷ் ரூ.1 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.