இதுவரை யாரும் பார்த்திராத ‘கே.ஜி.எஃப் 2’ பட ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டியின் அரிய புகைப்பட தொகுப்பு!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவருக்கு அமைந்த முதல் படமே மிகப் பெரிய ஹிட்டானது. அது தான் கன்னட படமான ‘கே.ஜி.எஃப்’. இப்படம் கன்னட மொழி மட்டுமில்லாமல் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளிலும் மெகா ஹிட்டானது.

இந்த படத்தை இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்க, யாஷ் ஹீரோவாக நடித்திருந்தார். கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி ‘கே.ஜி.எஃப்’ படத்தின் பார்ட் 2 ரிலீஸானது. இதிலும் ஸ்ரீநிதி ஷெட்டி தான் ஹீரோயினாக வலம் வந்திருந்தார். மேலும், முக்கிய ரோல்களில் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ் ஆகியோர் நடித்திருந்தார்கள். இப்போது ‘கே.ஜி.எஃப்’ பார்ட் 2 திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து ‘கோப்ரா’ என்ற தமிழ் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் ஸ்ரீநிதி ஷெட்டி. விக்ரம் ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகை ஸ்ரீநிதி ஷெட்டியின் அரிய புகைப்பட தொகுப்பு இதோ…

Srinidhi Shetty, Vikram @ Cobra Audio Launch Pics

Share.