‘கே.ஜி.எஃப் 2’வின் இசையமைப்பாளர் ‘கொரோனா’ லாக் டவுன் டைமில் இரும்புத் தொழில் செய்தாரா?

கன்னட சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் யாஷ். இவரின் புதிய படமான ‘கே.ஜி.எஃப்’ பார்ட் 2-வை இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கியுள்ளார். யாஷின் ரசிகர்கள் பல மாதங்களாக இப்படத்தின் ரிலீஸுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

இந்த படம் கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸானது. இதில் முக்கிய ரோல்களில் ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ் ஆகியோர் நடித்துள்ளார்களாம்.

‘அதீரா’ என்ற பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் சஞ்சய் தத் நடித்துள்ளார். இதன் முதல் பாகம் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. தற்போது, ‘கே.ஜி.எஃப்’ பார்ட் 2 திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில்,இந்த படத்துக்கு இசையமைத்த ரவி பஸ்ரூர் ஆரம்ப காலத்தில் சிற்பியாக இரும்புத் தொழில் செய்து வந்ததாக தகவல் கிடைத்துள்ளது.

அதன் பிறகு இசையமைப்பாளராக முயற்சி செய்து கன்னட மொழியில் பல படங்களில் பணியாற்றினாராம். ‘கொரோனா’ லாக் டவுன் டைமில் கூட, ரவி பஸ்ரூர் அவரது தந்தையின் பட்டறையில் வேலை செய்தாராம். அப்போது எடுக்கப்பட்ட ஸ்டில் ஒன்று சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Share.