ரசிகர்களுக்கு ஜூன் 03 டபுள் ட்ரீட்

நடிகர் யஷ் நடிப்பில் பிரசாந்த் நீல்
இயக்கத்தில் வெளியான படம் கே.ஜி.எஃப் 1 . இந்த படத்தை தமிழில் நடிகர் விஷால் அவரது தயாரிப்பு நிறுவனம் மூலம் வெளியிட்டார் . தமிழ் , ஹிந்தி ,மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் வெளியானது . யாரும் எதிர்பார்த்திராத வகையில் இந்த படம் மிக பெரிய வெற்றியை குவித்தது . இதன் பிறகு இந்த படத்தின் எதிர்பார்ப்பு இந்திய முழுவதும் அதிகரித்தது .

இந்த நிலையில் சுமார் மூன்று வருடம் கழித்து கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது . கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி உலக முழுவதும் வெளியான இந்த படம் இந்தியா முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றது. மேலும் அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது . படம் பார்த்த அனைவரும் இந்த படத்தை கொண்டாடி தீர்த்தனர் . மேலும் படத்தின் பாடல்களும் அனைவரும் ரசிக்கும்படி இருந்தது .

இன்னும் சில திரையரங்குகளில் கே.ஜி.எஃப் 2 படம் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் அமேசான் ஒ.டி.டி தளத்தில் வருகின்ற ஜூன் மாதம் 3ம் தேதி வெளியாக இருக்கிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனேவே ஜூன் – 03ஆம் தேதி நடிகர் கமல் நடிப்பில் விக்ரம் படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது தற்போது கே.ஜி.எஃப் 2 படமும் ஜூன் 3ம் தேதி வெளியாவதால் சினிமா ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி காத்திருக்கிறது.

Share.