மார்வெல் யுனிவர்ஸ் மாதிரி உருவாகும் கே.ஜி.எஃப் யுனிவர்ஸ் !

நடிகர் யஷ் நடிப்பில் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான படம் கே.ஜி.எஃப் 1 . இந்த படத்தை தமிழில் நடிகர் விஷால் அவரது தயாரிப்பு நிறுவனம் மூலம் வெளியிட்டார் . தமிழ் , ஹிந்தி ,மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் வெளியானது . யாரும் எதிர்பார்த்திராத வகையில் இந்த படம் மிக பெரிய வெற்றியை குவித்தது . இதன் பிறகு இந்த படத்தின் எதிர்பார்ப்பு இந்திய முழுவதும் அதிகரித்தது .

இந்த நிலையில் சுமார் மூன்று வருடம் கழித்து கே.ஜி.எஃப் படத்தின் இரண்டும் வெளியானது . கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி உலக முழுவதும் வெளியான இந்த படம் இந்திய முழுவதும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது . தொடர்ந்து அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தி வருகிறது . படம் பார்த்த அனைவரும் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர் . சினிமா நட்சத்திரங்களும் படக்குழுவை தொடர்ந்து பாராட்டி வருகின்றனர் . கே.ஜி.எஃப் 2 படத்தின் வெற்றி கொண்டாட்டமே இன்னும் முடிய நிலையில் கே.ஜி.எஃப் 3 படத்தை பற்றின அறிவிப்பு வெளியாகி உள்ளது .

இயக்குனர் பிரசாந்த் நீல் தற்பொழுது சலார் படத்தை இயக்கி வருகிறார் . இந்த படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார் .சலார் படத்தின் படப்பிடிப்பு 30 – 35 %முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது . இந்த வருடம் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடையும் என்று செய்தி வெளியாகி இருக்கிறது மேலும் கே.ஜி.எஃப் படத்தின் மூன்றாம் படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது என்றும் 2024-ஆம் ஆண்டு வெளியாக வாய்ப்பு இருக்கிறது என்றும் செய்திகள் வெளியாகி இருக்கிறது .

மேலும் மார்வல் உலகு மாதிரி வெவ்வேறு படங்களில் உள்ள வெவ்வேறு கதாபாத்திரங்களை கொண்டு வர உள்ளோம் என்றும் கே.ஜி.எஃப் படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார் .

Share.