‘கே.ஜி.எஃப் 2’ பார்த்த சூப்பர் ஸ்டார் ! என்ன சொன்னார் தெரியுமா ?

தமிழ் சினிமாவில் நாற்பது படங்களுக்கு மேலாக முன்னணியில் இருக்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் .
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அண்ணாத்த . இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார்.
இமான் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து
இருந்தது. இந்த படம் பெரியதாக வெற்றி பெறவில்லை.

பொதுவாக ரஜினிகாந்த் தமிழில் ஏதாவது படம் பார்த்துவிட்டு அது அவருக்கு மிகவும் பிடித்திருந்தால் உடனே அந்த படக்குழுவிற்கு தனது பாராட்டை தெரிவிப்பார் . சமீபத்தில் ஓடிடியில் வெளியான டாணாக்காரன் படத்தை பார்த்துவிட்டு விக்ரம் பிரபுவை பாராட்டினார்.அந்த வகையில் யஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியாகி உள்ள ‘கே.ஜி.எஃப் 2’ படத்தை பார்த்துள்ளார் ரஜினிகாந்த் .படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகண்டார் அவர்களுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினி அடுத்து நெல்சன் இயக்கத்தில் தலைவர் 169 படத்தில் நடிக்க இருக்கிறார் . மேலும் நெல்சன் இயக்கிய பீஸ்ட் படத்தையும் ரஜினிகாந்த் பார்த்தார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது.

Share.