நயன்தாரா – விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள படம்… சர்வதேச திரைப்பட விழாவில் கிடைத்த விருது!

சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா. நயன்தாராவும், இவரின் காதலரும், பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவனும் இணைந்து தங்களது ‘ரௌடி பிக்சர்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரித்துள்ள புதிய தமிழ் படம் ‘கூழாங்கல்’. இந்த படத்தை பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியுள்ளார்.

முழுக்க முழுக்க திறமையான புதுமுக நடிகர்கள் நடித்துள்ள இப்படத்துக்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில், வெளியிடப்பட்ட இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்தது. 50-வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் இந்த படம் கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி திரையிடப்பட்டது.

இவ்விழாவில் விக்னேஷ் சிவன், நயன்தாரா மற்றும் ‘கூழாங்கல்’ படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது, எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. தற்போது, இந்த விழாவில் இப்படம் டைகர் விருதை வென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை விக்னேஷ் சிவனே தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார். இவ்விருதை பெறும் முதல் தமிழ் படம் இதுதானாம்.

Share.