அதர்வாவின் குருதி ஆட்டம் திரைப்படம் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

குருதி ஆட்டம் ஸ்ரீ கணேஷ் எழுதி இயக்கி உள்ள அதிரடி திரில்லர் திரைப்படமாகும் . இப்படத்தில் அதர்வா மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், ராதிகா சரத்குமார், ராதா ரவி ஆகியோர் துணை வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் முதலில் ஏப்ரல் 2017 இல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது பிறகு ஆகஸ்ட் 2018 இல் தான் தயாரிப்பைத் தொடங்கியது. கோவிட்-19 தொற்றுநோய்க்கு முன்னதாக ஜூன் 2020 இல் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அப்பவும் ஒத்திவைக்கப்பட்டது இந்த படம் பிறகு 24 டிசம்பர் 2021 அன்று வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் சட்டச் சிக்கல்கள் காரணமாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது,இறுதியாக 5 ஆகஸ்ட் 2022 அன்று படம் வெளியாகி உள்ளது .

இந்த படத்துக்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார் .தினேஷ் புருஷோத்தமன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து உள்ளார் . இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கிய 8 தோட்டாக்கள் படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .

இந்நிலையில் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Share.