கெளதம் மேனன் – அமலா பால் ஜோடியாக நடித்துள்ள ‘குட்டி ஸ்டோரி’… ரிலீஸானது ஸ்னீக் பீக்!

தமிழ் திரையுலகில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக இருப்பது ‘வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்’. இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் ‘LKG, கோமாளி, பப்பி, எனை நோக்கி பாயும் தோட்டா, சீறு, மூக்குத்தி அம்மன்’ போன்ற பல தமிழ் படங்கள் வெளி வந்துள்ளது. இப்போது, இந்நிறுவனத்தின் தயாரிப்பில் ‘சுமோ, ஜோஷ்வா, துருவ நட்சத்திரம்’ மற்றும் சிலம்பரசன் – கெளதம் மேனன் காம்போவில் உருவாகும் புதிய படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

சமீபத்தில், ‘வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்’ நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதற்கு ‘குட்டி ஸ்டோரி’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளது. ஆந்தாலஜி படமான இதில் நான்கு குறும்படங்கள் இருக்கிறதாம். பிரபல இயக்குநர்களான கெளதம் வாசுதேவ் மேனன், வெங்கட் பிரபு, ஏ.எல்.விஜய், நலன் குமாரசாமி ஒவ்வொரு குறும்படத்தையும் இயக்கியுள்ளனர். தற்போது, இந்த படத்தின் புது ஸ்னீக் பீக் வீடியோவை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ஸ்னீக் பீக் வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்துள்ளது. இதில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள குறும்படத்தில் வருண் – ‘பிக் பாஸ்’ சாக்ஷி அகர்வாலும், இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள குறும்படத்தில் அமிதாஷ் பிரதான் – மேகா ஆகாஷும், இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள குறும்படத்தில் அவரே ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக அமலா பாலும், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள குறும்படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – அதிதி பாலனும் நடித்துள்ளனர். இந்த படத்தை வருகிற பிப்ரவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Share.