அடேங்கப்பா… ‘குற்றம் 23’ பட ஹீரோயின் மஹிமா நம்பியாரின் சொத்து மதிப்பு இவ்ளோவா?

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் மஹிமா நம்பியார். இவருக்கு முதல் படமே மலையாள மொழியில் தான் அமைந்தது. அது தான் ‘கார்யஸ்தன்’. இதில் ஹீரோவாக திலீப் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து 2012-ஆம் ஆண்டு ‘சாட்டை’ படம் மூலம் தமிழ் மொழியில் என்ட்ரியானார் மஹிமா நம்பியார்.

‘சாட்டை’ படத்துக்கு பிறகு நடிகை மஹிமா நம்பியாருக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘என்னமோ நடக்குது, மொசக்குட்டி, அகத்திணை, குற்றம் 23, புரியாத புதிர், அண்ணாதுரை, கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள், அண்ணனுக்கு ஜே, மகாமுனி, அசுரகுரு’ என தமிழ் படங்கள் குவிந்தது.

இது தவிர மலையாள மொழியில் ‘மாஸ்டர்பீஸ், மதுரராஜா’ ஆகிய படங்களில் நடித்தார். இப்போது, மஹிமா நம்பியார் நடிப்பில் தமிழில் ‘ஐங்கரன், ஓ மை டாக், ரத்தம்’ மற்றும் ஒரு மலையாள படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், நடிகை மஹிமா நம்பியாரின் சொத்து மதிப்பு ரூ.50 லட்சம் என தகவல் கிடைத்துள்ளது.

 

Share.