ரஜினிகாந்த், விஜய், அஜித் குறித்து பேசிய பாலிவுட் நடிகர் அமீர் கான்… வைரலாகும் வீடியோ!

பாலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அமீர் கான். இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய ஹிந்தி படம் ‘லால் சிங் சத்தா’. இந்த படத்தை அத்வைத் சந்தன் இயக்க, ஹீரோயினாக கரீனா கபூர் நடித்துள்ளார்.

மேலும், மிக முக்கிய ரோலில் நாகசைத்தன்யா நடித்துள்ளார். சமீபத்தில், இதன் ட்ரெய்லரை ரிலீஸ் செய்தனர். இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்தது.

இந்த படத்தை வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி ஹிந்தி மொழி மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், நடிகர் அமீர் கான் மீடியாவுக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், ‘தளபதி’ விஜய், ‘தல’ அஜித் பற்றி அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அமீர் கான் “நான் அஜித்தை பார்க்கும்போதெல்லாம் அவரிடம் ஒரு INTERNAL POWER இருப்பதுபோல எனக்கு தோணும். விஜய் சார் ஒரு அருமையான நடிகர். அவரை பார்க்கும்போது எனது குடும்பத்தில் ஒருவராக எனது சகோதரர் போன்ற உணர்வை எனக்கு தரும். அதேபோல் தான் ரஜினி சாரை பார்த்தாலும் எனக்கு தோணும்” என்று கூறியுள்ளார்.

Share.