ரசிகரின் கேள்விக்கு கெட்டவார்த்தையில் பதில் கூறிய லட்சுமிமேனன்!!!

தமிழ்சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகை லட்சுமிமேனன்.

2012ஆம் ஆண்டு வெளிவந்த “சுந்தரபாண்டியன்” மற்றும் “கும்கி” திரைப்படங்கள் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்த இரண்டு படங்களுமே இவருக்கு வெற்றியைத் தேடித் தந்ததால் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்க கமிட்டானார் லட்சுமிமேனன்.

குட்டிப்புலி, நான் சிகப்பு மனிதன், பாண்டியநாடு, மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம், மிருதன், ரெக்க என்று தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வெற்றி வாகை சூடி உள்ளார்.

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் 2017 ஆம் ஆண்டு பிரேக் எடுத்து தனது கல்லூரிப் படிப்பை முடித்தார். இந்த சமயங்களில் சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் லட்சுமிமேனன் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு அவ்வபோது பதிலளித்து வந்தார்.

இந்நிலையில் இவரது ரசிகர் ஒருவர் நீங்கள் சிங்கிளா என்று கேட்ட கேள்விக்கு இல்லை என்று வெட்கப்படும் ஸ்மைலி ஒன்றை கொடுத்து தான் காதலில் இருப்பதை உறுதி செய்துள்ளார் நடிகை லட்சுமிமேனன்.

இந்தக் கேள்வியை தொடர்ந்து மற்றொரு ரசிகர் உங்களது கவர்ச்சி புகைப்படத்தை அனுப்புங்கள் என்று கேட்டு அவரை கோபப்படுத்தினார், அதற்கு அவர் ஒரு கெட்ட வார்த்தையை கூறி இதே கேள்வியை கேட்டு கேட்டு எனக்கு அலுத்துப் போய்விட்டது என்று நக்கலாக பதில் கூறியுள்ளார். இதை பார்த்த அனைத்து ரசிகர்களும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

Share.