‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ சீரியல் மூலம் ஃபேமஸான நடிகை நக்ஷத்ராவின் திருமண புகைப்படங்கள்!

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நக்ஷத்ரா நாகேஷ். இவருக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படமே ‘சேட்டை’ தான். இந்த படத்தை இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ஆர்யா நடித்திருந்தார். இந்த படத்துக்கு பிறகு நடிகை நக்ஷத்ரா நாகேஷுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘வாயை மூடி பேசவும், புலிவால், இரும்பு குதிரை, நம்பியார், இந்திரஜித், Mr.லோக்கல்’ என படங்கள் குவிந்தது. இது தவிர ‘வாணி ராணி, லட்சுமி ஸ்டோர்ஸ், ரோஜா, நாயகி’ போன்ற டிவி சீரியல்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார் நடிகை நக்ஷத்ரா நாகேஷ்.

இப்போது, நடிகை நக்ஷத்ரா நாகேஷ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘தமிழும் சரஸ்வதியும்’ என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்நிலையில், இன்று (டிசம்பர் 9-ஆம் தேதி) நடிகை நக்ஷத்ரா ராகவ் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. இவர்களின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

1

2

3

4

5

6

7

8

 

Share.