மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் !

மாளவிகா மோகனன் மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் முக்கியமாக பணிபுரியும் ஒரு இந்திய நடிகை ஆவார். ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனனின் மகளான இவர், 2013ஆம் ஆண்டு பட்டம் போலே என்ற மலையாளத் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். மஜித் மஜிதியின் ஹிந்தித் திரைப்படமான பியாண்ட் தி க்ளவுட்ஸ் (2017) இல் நடித்ததற்காக அவர் பாராட்டுகளைப் பெற்றார்.

பின்னர் அவர் மலையாள த்ரில்லர் திரைப்படமான தி கிரேட் ஃபாதர் படத்தில் நடித்தார் . மேலும் தமிழ் ஆக்ஷன் படமான பேட்ட படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் இணைந்து ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் . இந்த படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்து இருந்தது .


இதனை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார் .இந்த படம் வெற்றி பெற்றாலும் இவரது கதாபாத்திரம் பெரிய வரவேற்பை பெறவில்லை . இதனை தொடர்ந்து நடிகர் தனுஷுடன் இணைந்து மாறன் படத்தில் நடித்தார் . இந்த படம் பெரிய தோல்வி படமாக அமைந்தது . மாளவிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவ்வாக இருப்பவர் . அந்த வகையில் தற்போது இவர் பதிவிட்டுள்ள போட்டோ ட்ரெண்ட் ஆகி வருகிறது .

Share.