“கண்ணாலே மிய்யா மிய்யா”… க்ளோசப் ஸ்டில்ஸை ஷேரிட்டு இளசுகளை கிறங்கடித்த லாவண்யா!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் லாவண்யா திரிபாதி. இவருக்கு தெலுங்கில் அமைந்த முதல் படமே நவீன் சந்திராவுடன் தான். அது தான் ‘அந்தால ராட்சசி’. இந்த படத்தினை பாப்புலர் இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கியிருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், பாக்ஸ் ஆஃபீஸில் கல்லா கட்டியது.

இந்த படத்துக்கு பிறகு நடிகை லாவண்யா திரிபாதிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘தூசுகெல்தா, பலே பலே மகோடிவோய், சோகடே சின்னி நயனா, லச்சிம்தேவிகி ஓ லெக்குந்தி, ஸ்ரீரஸ்து சுபமஸ்து. மிஸ்டர், ராதா, யுத்தம் சரணம், வுன்னாதி ஒக்கடே ஜிந்தகி, இன்டெலிஜென்ட், அந்தரிக்ஷம் 9000 KMPH, அர்ஜுன் சுரவரம்’ என தெலுங்கு படங்கள் குவிந்தது.

லாவண்யா திரிபாதி நடித்து சமீபத்தில் ரிலீஸான தெலுங்கு படங்கள் ‘A1 எக்ஸ்பிரஸ்’ மற்றும் ‘சாவு கபுரு சல்லகா’. இதில் ‘A1 எக்ஸ்பிரஸ்’ படத்தில் ஹீரோவாக சந்தீப் கிஷனும், ‘சாவு கபுரு சல்லகா’ படத்தில் ஹீரோவாக கார்த்திகேயாவும் நடித்திருந்தனர். லாவண்யா திரிபாதி தெலுங்கு மொழி படம் மட்டுமில்லாமல் தமிழ் மொழியிலும் ‘பிரம்மன், மாயவன்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான புது ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by Lavanya T (@itsmelavanya)

Share.