வெற்றிமாறன் – லாரன்ஸ் காம்போவில் ‘அதிகாரம்’… மலேசியாவில் ஷூட்டிங் நடத்த ப்ளான் போட்ட படக்குழு!

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். இப்போது, ராகவா லாரன்ஸ் நடிப்பில் ‘ருத்ரன், சந்திரமுகி 2’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், நேற்று (ஜூன் 24-ஆம் தேதி) ராகவா லாரன்ஸ் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

‘அதிகாரம்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்துக்கு டாப் இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் கதை – திரைக்கதை – வசனம் எழுதுகிறாராம். இப்படத்தை ‘எதிர் நீச்சல், காக்கி சட்டை, கொடி, பட்டாஸ்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்க உள்ளாராம். இதனை ‘ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் LLP’ நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் வெற்றிமாறனே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி’ மூலம் தயாரிக்க உள்ளாராம்.

Lawrence's Adhigaaram Shooting Plan1

நேற்று மாலை இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் – செகண்ட் லுக் போஸ்டர்ஸ் மற்றும் மோஷன் போஸ்டரும் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த ஃபர்ஸ்ட் லுக் – செகண்ட் லுக் போஸ்டர்ஸ் மற்றும் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்தது. தற்போது, இப்படத்தின் ஷூட்டிங்கை இந்த ஆண்டு (2021) இறுதியில் மலேசியாவில் ஆரம்பிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு 50 நாட்கள் ஷூட்டிங் நடத்த ப்ளான் போட்டுள்ளனராம்.

Lawrence's Adhigaaram Shooting Plan2

Share.