லாரன்ஸ் இயக்கி, நடிக்கும் ‘துர்கா’… வெளியானது மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். இப்போது, ராகவா லாரன்ஸ் நடிப்பில் ‘ருத்ரன், சந்திரமுகி 2’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், ‘அதிகாரம்’ என்ற படத்தில் நடிக்க லாரன்ஸ் ஒப்பந்தமானார் என அறிவிக்கப்பட்டது.

இந்த படத்துக்கு டாப் இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் கதை – திரைக்கதை – வசனம் எழுதுகிறாராம். இப்படத்தை ‘எதிர் நீச்சல், காக்கி சட்டை, கொடி, பட்டாஸ்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்க உள்ளாராம். இதனை ‘ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் LLP’ நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் வெற்றிமாறனே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி’ மூலம் தயாரிக்க உள்ளாராம்.

இந்நிலையில், ராகவா லாரன்ஸ் தனது புதிய படத்துக்கு ‘துர்கா’ என டைட்டில் சூட்டியிருப்பதாக அறிவித்துள்ளார். இந்த படத்தை லாரன்ஸ் தனது ‘ராகவேந்திரா புரொடக்ஷன்’ நிறுவனம் மூலம் தயாரிப்பதுடன், அவரே இயக்க உள்ளாராம். இன்று (ஆகஸ்ட் 6-ஆம் தேதி) வெளியாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்துள்ளது.

Share.