‘கே.ஜி.எஃப்’ யாஷுடன் மோதும் ராகவா லாரன்ஸ்… ‘ருத்ரன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். இப்போது, ராகவா லாரன்ஸ் நடிப்பில் ‘ருத்ரன், சந்திரமுகி 2, அதிகாரம், துர்கா’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘ருத்ரன்’ படத்தின் ரிலீஸுக்காக நடிகர் ராகவா லாரன்ஸின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

தற்போது, இப்படத்தின் ரிலீஸ் தேதியை ராகவா லாரன்ஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இன்று (ஆகஸ்ட் 26-ஆம் தேதி) அறிவித்துள்ளார். இந்த படத்தை அடுத்த ஆண்டு (2022) ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இதே நாளில் யாஷின் ‘கே.ஜி.எஃப் 2’ படமும் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

‘ருத்ரன்’ படத்தை எஸ்.கதிரேசன் தனது ‘ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ்ஸ் LLP’ மூலம் தயாரித்து, இயக்கி வருகிறார். இதில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்துக்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார்.

Share.