அடேங்கப்பா… லெஜண்ட் சரவணனின் ‘தி லெஜண்ட்’ படத்தின் முதல் நாள் வசூல் இவ்ளோவா?

‘சரவணா ஸ்டோர்ஸ்’ லெஜண்ட் சரவணன் ஹீரோவாக நடித்து, தயாரித்துள்ள படம் ‘தி லெஜண்ட்’. இந்த படத்தை இயக்குநர்கள் ஜேடி – ஜெர்ரி இணைந்து இயக்கியுள்ளனர்.

இந்த படம் நேற்று (ஜூலை 28-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் மிக முக்கிய ரோல்களில் கீத்திகா, ஊர்வசி ரவுத்தேலா, விவேக், நாசர், பிரபு, விஜயக்குமார், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரூபன் படத்தொகுப்பாளராகவும், எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர், பட்டுக்கோட்டை பிரபாகரன் வசனம் எழுதியுள்ளார்.

இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் லெஜண்ட் சரவணனின் நடிப்பை கிண்டலடித்து கலாய்த்த வண்ணமுள்ளனர். இந்நிலையில், நேற்று இப்படம் உலக அளவில் ரூ.90 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.