லெஜண்ட் சரவணனின் ‘தி லெஜண்ட்’ திரைப்படம் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

‘சரவணா ஸ்டோர்ஸ்’ லெஜண்ட் சரவணன் ஹீரோவாக நடித்து, தயாரித்துள்ள படம் ‘தி லெஜண்ட்’. இந்த படத்தை இயக்குநர்கள் ஜேடி – ஜெர்ரி இணைந்து இயக்கியுள்ளனர்.

இந்த படம் இன்று (ஜூலை 28-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. இதில் மிக முக்கிய ரோல்களில் கீத்திகா, ஊர்வசி ரவுத்தேலா, விவேக், நாசர், பிரபு, விஜயக்குமார், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரூபன் படத்தொகுப்பாளராகவும், எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர், பட்டுக்கோட்டை பிரபாகரன் வசனம் எழுதியுள்ளார்.

தற்போது, இப்படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Share.