ஆக்ஷனில் மாஸ் காட்டும் லெஜண்ட் சரவணன்… எதிர்பார்ப்பை எகிற வைத்த ‘தி லெஜண்ட்’ புதிய ட்ரெய்லர்!

‘சரவணா ஸ்டோர்ஸ்’ லெஜண்ட் சரவணன் ஹீரோவாக நடித்து, தயாரித்துள்ள படம் ‘தி லெஜண்ட்’. இந்த படத்தை இயக்குநர்கள் ஜேடி – ஜெர்ரி இணைந்து இயக்கியுள்ளனர். இதில் மிக லுக்கிய ரோல்களில் கீத்திகா, ஊர்வசி ரவுத்தேலா, விவேக், நாசர், பிரபு, விஜயக்குமார், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரூபன் படத்தொகுப்பாளராகவும், எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர், பட்டுக்கோட்டை பிரபாகரன் வசனம் எழுதியுள்ளார்.

சமீபத்தில், இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியானது. இந்த ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது, படத்தின் புதிய ட்ரெய்லரை லெஜண்ட் சரவணன் ட்விட்டரில் ரிலீஸ் செய்துள்ளார். இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது. படத்தை வருகிற ஜூலை 28-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Share.