லிங்குசாமி – ராம் போதினேனி கூட்டணியில் உருவாகும் படம்… வெளியானது அசத்தலான அப்டேட்!

தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் லிங்குசாமி. இவர் ‘ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பையா’ போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருக்கிறார். லிங்குசாமி இயக்கிய கடைசி படமான ‘சண்டக்கோழி 2’ 2018-ஆம் ஆண்டு ரிலீஸானது. இதில் ஹீரோவாக விஷால் நடித்திருந்தார். சமீபத்தில், இயக்குநர் லிங்குசாமி இயக்க உள்ள புதிய படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது.

இந்த படத்தில் டோலிவுட்டில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் ராம் போதினேனி நடிக்க உள்ளாராம். இப்படம் நடிகர் ராம் போதினேனியின் கேரியரில் 19-வது படமாம். இது ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக உள்ளதாம். இதனை ‘ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன்’ என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். இதில் ராம் போதினேனிக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்க உள்ளார்.

Lingusamy And Ram Pothineni Film Shooting Plan1

இதற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி இப்படத்திற்கு பூஜை போடப்பட்டது. இப்போது, இந்த படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங்கை வருகிற ஜூலை 12-ஆம் தேதி முதல் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.