2021-ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான சிறந்த 10 படங்களின் லிஸ்ட்!

இந்த ஆண்டு (2021) திரையரங்குகளிலும், நேரடியாக பிரபல OTT தளங்களிலும் பல படங்கள் வெளியானது. இதில் சூப்பர் ஹிட்டான சிறந்த 10 படங்களின் லிஸ்ட் இதோ…

1.ஜெய் பீம் :

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. சூர்யாவின் கேரியரில் 39-வது படமான ‘ஜெய் பீம்’-ஐ த.செ.ஞானவேல் இயக்கியிருந்தார். இப்படம் இந்த ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’-யில் ரிலீஸானது. சூர்யா வக்கீலாக நடித்திருந்த இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன், ராவ் ரமேஷ், குரு சோமசுந்தரம், தமிழ், எம்.எஸ்.பாஸ்கர், ஜெயபிரகாஷ், இளவரசு, சுஜாதா சிவக்குமார், சிபி தாமஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார், எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

2.மாஸ்டர் :

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘மாஸ்டர்’ இந்த ஆண்டு (2021) பொங்கல் ஸ்பெஷலாக திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்த படத்தை பிரபல தயாரிப்பாளரும், விஜய்யின் நெருங்கிய உறவினருமான சேவியர் பிரிட்டோ தனது ‘XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார்.

3.மாநாடு :

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. இவர் நடித்த ‘மாநாடு’ திரைப்படம் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். இதில் ஹீரோயினாக கல்யாணி ப்ரியதர்ஷனும், வில்லன் ரோலில் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்திருந்தனர். மேலும், மிக முக்கிய ரோல்களில் பிரேம்ஜி அமரன், மனோஜ் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். ‘V ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் சுரேஷ் காமாட்சி அதிக பொருட்செலவில் இப்படத்தை தயாரித்திருந்தார்.

4.கர்ணன் :

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடித்த ‘கர்ணன்’ திரைப்படம் இந்த ஆண்டு (2021) ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார். இதில் கதையின் நாயகியாக ரஜிஷா விஜயன் வலம் வந்தார். மேலும், கௌரி கிஷன், யோகி பாபு, லக்ஷ்மி ப்ரியா, லால், ஜி.எம்.குமார் ஆகியோர் மிக முக்கிய ரோல்களில் நடித்திருந்தனர். இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

5.டாக்டர் :

டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். இவர் நடித்த ‘டாக்டர்’ திரைப்படம் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கியிருந்தார். இதில் சிவாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் என்பவர் நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் வினய், அர்ச்சனா, யோகி பாபு, மிலிந்த் சோமன், இளவரசு, அருண் அலெக்ஸாண்டர், தீபா ஷங்கர் மற்றும் பலர் நடித்திருந்தனர். இதற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் இசையமைத்திருந்தார்.

6.சார்பட்டா பரம்பரை :

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஆர்யா. இயக்குநர் பா.இரஞ்சித் – நடிகர் ஆர்யா காம்போவில் உருவான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் இந்த ஆண்டு ஜூலை மாதம் 22-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’யில் ரிலீஸானது. இதில் ஹீரோயினாக துஷாரா நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் பசுபதி, சந்தோஷ் பிரதாப், கலையரசன், ஜான் விஜய், அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், காளி வெங்கட், மாறன் மற்றும் பலர் நடித்திருந்தனர். குத்துச் சண்டை வீரராக ஆர்யா வலம் வந்த இந்த படத்துக்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

7.ரைட்டர் :

சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சமுத்திரக்கனி. இவர் நடிப்பில் கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி ரிலீஸான படம் ‘ரைட்டர்’. இந்த படத்தை அறிமுக இயக்குநர் பிராங்க்லின் இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் திலீபன், இனியா, சுப்ரமண்யம் சிவா, ஜி.எம்.சுந்தர், ஹரி கிருஷ்ணன், போஸ் வெங்கட் மற்றும் பலர் நடித்திருந்தனர். இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார்.

8.மண்டேலா :

சினிமாவில் டாப் காமெடியன்களில் ஒருவராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் ஹீரோவாக நடித்த ‘மண்டேலா’ திரைப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் 5-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘நெட்ஃப்ளிக்ஸ்’யில் ரிலீஸானது. இந்த படத்தை இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கியிருந்தார், மிக முக்கிய ரோல்களில் சங்கிலி முருகன், ஜி.எம்.சுந்தர், ஷீலா ராஜ்குமார், கண்ணா ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்திருந்தார், பிலோமின் ராஜ் படத்தொகுப்பாளராகவும், விது அய்யன்னா ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியிருந்தார்கள்.

9.விநோதய சித்தம் :

சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சமுத்திரக்கனி. இவர் நடித்த ‘விநோதய சித்தம்’ என்ற திரைப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘ஜீ5’யில் ரிலீஸானது. ஸ்ரீவத்சன் – விஜி இருவருடன் இணைந்து சமுத்திரக்கனியே திரைக்கதை – வசனம் எழுதி இந்த படத்தை இயக்கியிருந்தார். இதில் சமுத்திரக்கனியுடன் இணைந்து தம்பி இராமையா, தீபக், ஜெயபிரகாஷ், முனிஷ்காந்த், ஹரி, நமோ நாராயணன், ‘பிச்சைக்காரன்’ மூர்த்தி, சஞ்சிதா ஷெட்டி, ஸ்ரீரஞ்சனி, யுவலக்ஷ்மி, ஷெரின் ஆகியோர் நடித்திருந்தனர். சத்யா இசையமைத்திருந்த இந்த படத்துக்கு என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்திருந்தார், ஏ.எல்.ரமேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார். இதனை ‘அபிராமி மீடியா ஒர்க்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் அபிராமி ராமநாதன் தயாரித்திருந்தார்.

10.கசட தபற :

சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்புதேவன். இவர் இயக்கிய ஹைப்பர் லிங்க் படமான ‘கசட தபற’ இந்த ஆண்டு ஆகஸ்ட் 27-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘சோனி லைவ்’-வில் ரிலீஸானது. இதில் ஹரிஷ் கல்யாண், சந்தீப் கிஷன், ஷாந்தனு, வெங்கட் பிரபு நடித்திருந்தனர். மேலும், மிக முக்கிய ரோல்களில் பிரேம்ஜி, ரெஜினா, ப்ரியா பவானி ஷங்கர், விஜயலக்ஷ்மி, அரவிந்த ஆகாஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

Share.