வெளியான 3 நாட்களில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்களின் லிஸ்ட்!

தமிழ் சினிமாவில் மாஸ் காட்டி வரும் ஒவ்வொரு ஹீரோவுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தன் ரசிகர்களுக்காக தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்கள் ஹீரோக்கள். இதுவரை தமிழில் வெளிவந்த படங்களில் முதல் 3 நாட்களில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்களின் லிஸ்ட் இதோ…

1.பீஸ்ட் :

 

‘தளபதி’ விஜய் நடிப்பில் இந்த ஆண்டு (2022) ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியான படம் ‘பீஸ்ட்’. இந்த படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் 3 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.68.5 கோடி வசூல் செய்தது.

2.சர்கார் :

‘தளபதி’ விஜய் நடிப்பில் 2018-ஆம் ஆண்டு வெளியான படம் ‘சர்கார்’. இந்த படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் 3 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.66 கோடி வசூல் செய்தது.

3.வலிமை :

அஜித் நடிப்பில் இந்த ஆண்டு (2022) பிப்ரவரி 24-ஆம் தேதி வெளியான படம் ‘வலிமை’. இந்த படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் 3 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.61.60 கோடி வசூல் செய்தது

4.பிகில் :

‘தளபதி’ விஜய் நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான படம் ‘பிகில்’. இந்த படத்தை இயக்குநர் அட்லி இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் 3 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.61.7 கோடி வசூல் செய்தது.

5.அண்ணாத்த :

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி நடிப்பில் கடந்த ஆண்டு (2021) வெளியான படம் ‘அண்ணாத்த’. இந்த படத்தை இயக்குநர் சிவா இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் 3 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.58.5 கோடி வசூல் செய்தது.

Share.