காஜல் அகர்வாலின் ‘லைவ் டெலிகாஸ்ட்’ வெப் சீரிஸ்… வெளியானது ‘ஆராரிரோ’ பாடல்!

திரையுலகில் பாப்புலர் நடிகைககளில் ஒருவராக வலம் வருபவர் காஜல் அகர்வால். இப்போது இவர் நடிப்பில் தமிழில் ‘இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ், ஹேய் சினாமிகா’, தெலுங்கில் ‘மோசகல்லு, ஆச்சார்யா’ மற்றும் ஹிந்தியில் ‘மும்பை சகா’ என ஆறு படங்களும், ‘லைவ் டெலிகாஸ்ட்’ என்ற வெப் சீரிஸும் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘லைவ் டெலிகாஸ்ட்’ வெப் சீரிஸின் சிங்கிள் டிராக்கான ‘ஆராரிரோ’வை இன்று (பிப்ரவரி 6-ஆம் தேதி) டாப் நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் ட்விட்டரில் ரிலீஸ் செய்துள்ளார். சமீபத்தில், வெளியிடப்பட்ட டீசர் மற்றும் ட்ரெய்லர் இவ்வெப் சீரிஸின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது.

இந்த வெப் சீரிஸை வருகிற பிப்ரவரி 12-ஆம் தேதி ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்’ என்ற பிரபல OTT தளத்தில் தமிழ் மொழி மட்டுமில்லாமல் மராத்தி, ஹிந்தி, கன்னடம், பெங்காலி, மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். ஹாரர் ஜானரில் தயாராகியுள்ள இதில் மிக முக்கிய ரோல்களில் ‘கயல்’ ஆனந்தியும், வைபவ்வும் நடித்துள்ளனர். இதற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார், ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார், வெங்கட் ராஜன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

Share.