எதிர்பார்ப்பை எகிறவைத்து லோகேஷ் !

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள படம் விக்ரம் .இந்த படத்தில் விஜய்சேதுபதி , ஃபகத் பாசில் , காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர் . மேலும் நடிகர் சூர்யா
சிறப்பு தோற்றத்தில் இந்த படத்தில் நடித்து இருக்கிறார் இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது .

இந்நிலையில் விக்ரம் படம் ஜூன் 03 ஆம் தேதி வெளியாக உள்ளது . நடிகர் கமல் ஒரு பக்கம் படத்தினை தீவிரமாக விளம்பரப்படுத்தி வருகிறார் மறுபக்கம் படத்தின் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது .பல திரையரங்கில் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன .


இந்நிலையில் படத்தின் இயக்குனர் லோகேஷ் மற்றும் இசையமைப்பாளார் அனிருத்துடன் அவரது ஸ்டுடியோவில் எடுத்த புகை படத்தை பகிர்ந்து உள்ளார் . அவர்கள் பின்னணியில் உலகநாயகன் கமல் ஹாசனின் டைட்டில் கார்டு உள்ளது . இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது . மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது என்றும் கூறலாம் .

Share.