லோகேஷ் கனகராஜிடம் சூர்யா அடிக்கடி கேட்கும் கேள்வி என்ன தெரியுமா ?

மாநகரம் , கைதி , மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கியவர் நடிகர் லோகேஷ் கனகராஜ். அதனை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி இருந்தார் .இந்த படத்தில் நடிகர்கள் பஹத் பாசில், விஜய் சேதுபதி, உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர் . ‛விக்ரம்’ படம் அதிரடி ஆக்சன் கதையில் தயாராகி இருந்தது . மேலும் நடிகர் சூர்யா இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.நடிகர் சூர்யாவின் கதாபாத்திரம் நிறைய ரசிகர்களை கொண்டாட வைத்தது .

விக்ரம் படம் வெற்றிக்கு பிறகு பலர் நடிகர்கள் லோகேஷ் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்து வருகின்றனர் . மேலும் லோகேஷ் இயக்கும் படங்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது . இந்நிலையில் லோகேஷ் தற்போது தளபதி 67 படத்திற்காக லொகேஷன் தேடும் பணிகளில் இறங்கி உள்ளார் . இயக்குனர் ரத்னகுமாருடன் இணைந்து தற்போது தளபதி 67 படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கி உள்ளார் .

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து ஒரு முழு படம் எப்பொழுது எடுப்பீர்கள் என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு இரும்பு கை மாயாவி என்கிற படத்தை நடிகர் சூர்யாவை வைத்து தான் இயக்க உள்ளேன் . 5 வருடமாக சூர்யா அவர்களிடம் பல கதைகளை பற்றி விவாதித்து வருகிறேன் . மேலும் இரும்பு கை மாயாவி படம் சூர்யா சாருக்கு எழுதினது தான் நிச்சயம் அந்த படம் நடக்கும் என்று தெரிவித்துள்ளார் .
மேலும் சூர்யா தன்னை பார்க்கும்போதெல்லாம் எப்போ இரும்பு கை மாயாவி என்று கேட்டுக்கொண்டே இருப்பார்
என்று லோகேஷ் தெரிவித்துள்ளார் .

Share.