முழுச் சுதந்திரம் அளித்த கமல் !

மாநகரம் , கைதி , மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கியவர் நடிகர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்பொழுது நடிகர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி வருகிறார் .இந்த படத்தில் நடிகர்கள் பஹத் பாசில், விஜய் சேதுபதி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‛விக்ரம்’ படம் அதிரடி ஆக்ஷன் கதையில் தயாராகி உள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன. விக்ரம் படத்தை ஜூன் 3ம் தேதி வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

சமிபத்தில் சென்னையில் நடந்த சிஐஐ மாநாட்டில் கலந்துக்கொண்டு பேசிய லோகேஷ் ‛‛விக்ரம் படத்தில் எந்த இடத்திலும் கமல் தலையிடவே இல்லை.நான் கூட யோசனை கேட்கலாம் என்றிருந்தேன். ஆனால் அதற்கும் அவர் இடம் அளிக்கவில்லை. இது உன்னோட படம் என்ன வேணாலும் செய் என முழு சுதந்திரம் அளித்தார்” என்று பேசினார். இந்நிலையில் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் படமாக விக்ரம் படம் இருக்கும் என்று நம்பலாம்.

Share.