தொடங்கவுள்ள லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல் இணையும் திரைப்படத்தின் படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் கமல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் எவனென்று நினைத்தாய் என்று தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ள படத்தில் நடிக்கவிருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியானது.

இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்றும் கூறியிருந்தார்கள். மேலும் இந்த படத்தில் புதிய டெக்னாலஜி ஒன்றை கமல் பயன்படுத்தவுள்ளதாகவும் செய்தி வந்தது.

இதைத்தொடர்ந்து கமல் இந்தப் படத்தின் ஷூட்டிங்கை குறைந்த கால அளவில் முடிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறாராம். இதற்கு முன்னர் கமல் நடிப்பில் தூங்காவனம் திரைப்படம் 35 முதல் 40 நாட்களுக்குள் முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் வருகிற நவம்பர் 2ம் வாரம் முதல் தொடங்க உள்ளதாகவும், இதற்கான வேலைகளில் திரைப்பட குழு ஏற்கனவே இறங்கிவிட்டதாகவும் தகவல் வந்துள்ளது.

Share.