இயக்குநர் சீட்டில் அமர்ந்த விஜய்… ‘மாஸ்டர்’-யில் கெஸ்ட் ரோலில் நடித்த பிரபலம் இவர்தான்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ கடந்த ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. இவர் நடித்திருக்கும் புதிய படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம்.

இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். சமீபத்தில், இப்படத்தின் எட்டு பாடல்களை ரிலீஸ் செய்தனர். கடந்த நவம்பர் 14-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக விஜய்யின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்த ‘மாஸ்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை ரிலீஸ் செய்தனர்.

சமீபத்தில், படத்தினை பார்த்த சென்சார் குழு ‘யு/ஏ’ சர்டிஃபிகேட் அளித்தது. படத்தை பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 13-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். தற்போது, இந்த படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளதாகவும், அவர் நடித்த காட்சியை விஜய்யே டைரக்ட் செய்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது.

Share.