இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ள லோகேஷ் கனகராஜின் திரைப்படம்!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணியில் இருக்கும் இயக்குனர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை தற்போது இயக்கியுள்ளார்.

தமிழ் திரையுலகில் இவர் “மாநகரம்” எனும் திரைப்படம் மூலம் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து “கைதி” என்ற சூப்பர்ஹிட் பிளாக்பஸ்டர் திரைப்படத்தை கொடுத்தார்.

தற்போது இவர் இயக்கத்தில் வெளியான மாநகரம் திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாகவும், இதை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கவுள்ளதாகவும் செய்தி வந்துள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி 2021 முதல் தொடங்கவுள்ளதாகவும் தற்போது தகவல் வந்துள்ளது.

தமிழில் இந்த படத்தில் ஸ்ரீ, சுந்தீப் கிஷன், ரெஜினா கசாண்ட்ரா, சார்லி, மதுசூதன் ராவ், முனீஸ்காந்த், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள்.

Share.