கமல்ஹாசனை தொடர்ந்து சிம்புவுடன் கூட்டணி சேர்கிறாரா லோகேஷ் கனகராஜ்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் “இந்தியன் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் கமல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “எவனென்று நினைத்தாய்_ என்று தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ள படத்தில் நடிக்கவிருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியானது.

இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்றும் கூறியிருந்தார்கள். மேலும் இந்த படத்தில் புதிய டெக்னாலஜி ஒன்றை கமல் பயன்படுத்தவுள்ளதாகவும் செய்தி வந்தது.

இதைத்தொடர்ந்து தற்போது கமல் இந்தப் படத்தின் ஷூட்டிங்கை குறைந்த கால அளவில் முடிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறாராம். இதுமட்டுமின்றி ராஜ்கமல் பிலிம்ஸ் உடன் லோகேஷ் கனகராஜ் மற்றொரு படத்திற்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த படத்தில் ஹீரோவாக சிம்பு நடிக்க உள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

Share.