லோகேஷ் கனகராஜிற்கு மிகவும் பிடித்த 5 திரைப்படங்கள் !

மாநகரம் , கைதி , மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கியவர் நடிகர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் விக்ரம் .இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் நாயகனாக நடித்து இருந்தார் . மேலும் இந்த படத்தில் நடிகர்கள் பஹத் பாசில், விஜய் சேதுபதி, உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர் . நடிகர் சூர்யா இந்த படத்தில் சிறப்பு நடித்து இருந்தார் .‛விக்ரம்’ படம் அதிரடி ஆக்சன் கதையில் தயாராகி இருந்தது . இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார் . கடந்த ஜூன் 3 -ஆம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

விக்ரம் படத்தின் வசூல் பல சாதனைகளை புரிந்து வருகிறது . படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் . படத்தின் வெற்றிக்காக நடிகர் கமல் இயக்குனர் லோகேஷ் அவர்களுக்கு கார் ஒன்றை பரிசளித்து இருந்தார் . விக்ரம் படத்தின் வெற்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜ்
அவர்களுக்கு தமிழ் சினிமாவில் மிக பெரிய இடம் கிடைத்துள்ளது மேலும் ரசிகர்கள் பட்டாளமும் உண்டாகி உள்ளது .

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு மிகவும் பிடித்த 5 படங்களை பற்றி பாப்போம் . இவர் நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகர் . அந்த வகையில் இவருக்கு மிக பிடித்த படங்களில் முதலிடத்தில் இருக்கும் படம் “சத்யா “. இந்த படம் இவருக்கு மிகவும் பிடித்து போவதற்கு காரணம் அந்த படத்தில் இடம்பெற்ற சண்டை காட்சிகள் தான் என்று கூறியுள்ளார் . இரண்டாவதாக நடிகர் கமல் இயக்கி நடித்த ” விருமாண்டி ” படம் தனக்கு பிடித்த படம் என்று கூறியுள்ளார் .

மூன்றாவதாக ஹாலிவுட் இயக்குனர் மார்ட்டின் ஸ்கோர்செசி இயங்கின “குட் பெல்லோவ்ஸ் ” நான்காவதாக அதே இயக்குனர் இயக்கிய டிபார்டெட் படத்தையும் கூறியுள்ளார் . ஐந்தாவதாக தனக்கு பிடித்த படமாக பிரபல இயக்குனர் குவெண்டின் டாரண்டினோ இயக்கத்தில் வெளியான சாங்கோ அன்செயின்டு என்கிற படத்தையும் தெரிவித்துள்ளார் .

Share.