துபாய்க்கு சுற்றுலா சென்ற ‘மாநாடு’ பட ஹீரோயின் கல்யாணி… தொடை தெரிய கவர்ச்சி போஸ்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் கல்யாணி ப்ரியதர்ஷன். பாப்புலர் இயக்குநர் ப்ரியதர்ஷன், நடிகை லிஸ்சி தம்பதியினரின் மகளான கல்யாணி, அறிமுகமான முதல் தெலுங்கு படமே நாகார்ஜுனாவின் மகன் அகிலுடன் தான். அது தான் ‘ஹலோ’.

அதன் பிறகு நடிகை கல்யாணிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தெலுங்கில் ‘சித்ரலஹரி, ரணரங்கம்’ என படங்கள் குவிந்தது. பின், தமிழில் அறிமுகமான கல்யாணிக்கு அமைந்த முதல் படமே டாப் ஹீரோக்களில் ஒருவரான சிவகார்த்திகேயனுடன் தான். அது தான் ‘ஹீரோ’. ‘ஹீரோ’ படத்துக்கு பிறகு ஆந்தாலஜி படமான ‘புத்தம் புதுக் காலை’யிலும், சிலம்பரசனின் ‘மாநாடு’ படத்திலும் நடித்திருந்தார் கல்யாணி.

‘மாநாடு’ படத்தில் கல்யாணியின் நடிப்பு ரசிகர்களை அதிக லைக்ஸ் போட வைத்தது. இப்போது கல்யாணி ப்ரியதர்ஷன் நடிப்பில் ஒரு மலையாள படம் மட்டும் இருக்கிறது. இந்நிலையில், கல்யாணி துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு எடுத்த ஹாட்டான ஸ்டில்ஸை அவரே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Share.