ரஜினியை சாதாரணமாக நினைக்க வேண்டாம் !

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அண்ணாத்த . இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார்.கடந்த தீபாவளிக்கு வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் தலைவர் 169 படத்தை தயாரிக்க உள்ளதாகவும், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அந்த படத்தை இயக்கு உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி இருந்தது .

அதன் பிறகு இயக்குனர் நெல்சன் அடிக்கடி ரஜினிகாந்தை சந்தித்து கதை பற்றின விவாதத்தில் இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருந்து . இந்நிலையில் தலைவர் 169 படத்தின் தலைப்பு ஜெயிலர் என்று சமீபத்தில் அறிவித்து இருந்தனர் .ரஜினி ரசிகர்கள் அந்த டைட்டிலை சோசியல் மீடியாவில் டிரெண்ட் செய்தனர். பல சினிமா பிரபலங்கள் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் சிம்பு நடித்த மாநாடு படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சியும், ஜெயிலர் படத்தின் போஸ்டர் வெளியானதை அடுத்து ரஜினிக்கும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவு போட்டிருந்தார்.

அதில், ‛‛எத்தனை குதிரைகள் ஓடினாலும் ரஜினிகாந்த் என்ற இந்த குதிரை விழும் சட்டென எழும். வெற்றிகொள்ளும் குதிரை. சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம். ரஜினி என்ற மூன்றெழுத்து மேஜிக், ஜெயிலர் மூலம் மீண்டும் நிகழும் வாழ்த்துக்கள்” என தெரிவித்தார்.

Share.