அடேங்கப்பா… ‘மாவீரன், RRR’ படங்களின் ஹீரோ ராம் சரணின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ராம் சரண். ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவியின் மகனாக இருந்தும் திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வருகிறார் ராம் சரண். இவர் ஹீரோவாக நடித்த முதல் தெலுங்கு படம் ‘சிறுத்தா’.

இந்த படத்துக்கு பிறகு பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய ‘மகதீரா’ என்ற படத்தில் நடித்தார். இப்படம் தமிழிலும் ‘மாவீரன்’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியானது. இந்த படத்தின் ஹிட்டிற்கு பிறகு ராம் சரணுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தெலுங்கு படங்கள் குவிந்தது.

இப்போது ராம் சரண் நடிப்பில் ‘RRR, ஆச்சார்யா, RC15’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘ஆச்சார்யா’ படத்தில் ராம் சரணுடன் இணைந்து அவரது அப்பா சிரஞ்சீவியும் நடித்துள்ளார். ‘RRR’ படத்தை இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கியிருக்கிறார். இவ்விரண்டு படங்களும் முடிவடைந்து ரிலீஸுக்காக காத்திருக்கிறது. ‘RC15’ படத்தை பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார். இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் ராம் சரணின் சொத்து மதிப்பு ரூ.1338 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Share.