விஜயகாந்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ண மாதவன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் மாதவன். இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே மெகா ஹிட்டானதுடன் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி கொடுத்தது. அந்த படம் தான் ‘அலைபாயுதே’. அதன் இயக்குநர் மணிரத்னம். ‘அலைபாயுதே’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகர் மாதவனுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘என்னவளே, மின்னலே, டும் டும் டும், பார்த்தாலே பரவசம், கன்னத்தில் முத்தமிட்டால், ரன், அன்பே சிவம், நள தமயந்தி, லேசா லேசா, ப்ரியமான தோழி, ஜே ஜே, எதிரி, ஆய்த எழுத்து, பிரியசகி, தம்பி, இரண்டு, ஆர்யா, எவனோ ஒருவன், வாழ்த்துகள், யாவரும் நலம், குரு என் ஆளு, மன்மதன் அம்பு, வேட்டை, இறுதிச்சுற்று, விக்ரம் வேதா, சைலன்ஸ், மாறா’ என தமிழ் படங்கள் குவிந்தது.

இப்போது, மாதவன் ஹீரோவாக நடித்து, தயாரித்து, இயக்கி கொண்டிருக்கும் படம் ‘ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட்’. இந்த படத்துக்கான இறுதிக்கட்ட வேலைகள் முடிவடையும் தருவாயில் இருக்கிறதாம். இந்நிலையில், மாதவன் நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு சூப்பர் ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. 2002-யில் ரிலீஸான தமிழ் படம் ‘ரமணா’.

விஜயகாந்த் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். இதில் முக்கிய ரோலில் யூகி சேது நடித்திருந்தார். ஆனால், அந்த ரோலில் நடிக்க வைக்க வேண்டுமென இயக்குநர் முருகதாஸின் முதல் சாய்ஸாக இருந்தது மாதவன் தானாம். பின், சில காரணங்களால் மாதவனால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

Share.