பீச்சில் மனைவி சரிதாவுடன் நெருக்கமாக இருந்தபோது போலீஸில் சிக்கிய மாதவன்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் மாதவன். இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே மெகா ஹிட்டானதுடன் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி கொடுத்தது. அந்த படம் தான் ‘அலைபாயுதே’. அதன் இயக்குநர் மணிரத்னம். ‘அலைபாயுதே’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகர் மாதவனுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘என்னவளே, மின்னலே, டும் டும் டும், பார்த்தாலே பரவசம், கன்னத்தில் முத்தமிட்டால், ரன், அன்பே சிவம், நள தமயந்தி, லேசா லேசா, ப்ரியமான தோழி, ஜே ஜே, எதிரி, ஆய்த எழுத்து, பிரியசகி, தம்பி, இரண்டு, ஆர்யா, எவனோ ஒருவன், வாழ்த்துகள், யாவரும் நலம், குரு என் ஆளு, மன்மதன் அம்பு, வேட்டை, இறுதிச்சுற்று, விக்ரம் வேதா, சைலன்ஸ், மாறா’ என தமிழ் படங்கள் குவிந்தது. மாதவன் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் ஹிந்தி, ஆங்கிலம், கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

இப்போது, மாதவன் ஹீரோவாக நடித்து, தயாரித்து, இயக்கி கொண்டிருக்கும் படம் ‘ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட்’. ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஆறு மொழிகளில் உருவாகி கொண்டிருக்கும் இந்த படத்துக்கான இறுதிக்கட்ட வேலைகள் முடிவடையும் தருவாயில் இருக்கிறதாம். 1999-ஆம் ஆண்டு மாதவன் சரிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். மாதவன் – சரிதா தம்பதியினருக்கு வேதாந்த் என்ற மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, மாதவன் தனது மனைவி சரிதா குறித்து மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் “திருமணத்துக்கு முன்பு நான் என் மனைவியை காதலித்த போது, நாங்கள் இருவரும் டபுள் டக்கர் பஸ் மற்றும் பீச்சில் பாறைகளுக்கு பின்னால் எல்லாம் சென்று நெருக்கமாக இருந்த தருணங்கள் உண்டு. அப்போது ஒரு முறை மனைவியுடன் தனிமையில் நெருக்கமாக இருந்தபோது ஒரு போலீசார் வந்து எங்களை கிளம்ப சொன்ன சம்பவமும் நடந்திருக்கிறது” என்று கூறியுள்ளார்.

Share.