மாதவன் இயக்கி, நடித்துள்ள ‘ராக்கெட்ரி’ படம் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் மாதவன். இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே மெகா ஹிட்டானதுடன் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி கொடுத்தது. அந்த படம் தான் ‘அலைபாயுதே’. அதன் இயக்குநர் மணிரத்னம். ‘அலைபாயுதே’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகர் மாதவனுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தமிழ் படங்கள் குவிந்தது. இப்போது, மாதவன் ஹீரோவாக நடித்து, தயாரித்து, இயக்கியுள்ள படம் ‘ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட்’. திரவ எரிபொருள் பயன்படுத்தி ராக்கெட் அனுப்பும் திட்டத்தை வடிவமைத்த விஞ்ஞானி நம்பி நாராயணனின் பயோ பிக்கான இந்த படம் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஆறு மொழிகளில் இன்று (ஜூலை 1-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.

இதில் மாதவனுடன் இணைந்து சிம்ரன், ரவி ராகவேந்திரா, மிஷா கோஷல் மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும், கெஸ்ட் ரோலில் சூர்யா (தமிழ் வெர்ஷன்) மற்றும் ஷாருக்கான் (ஹிந்தி வெர்ஷன்) நடித்துள்ளார்கள். தற்போது, இப்படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Share.