அடேங்கப்பா… ‘மெட்ராஸ், கபாலி’ படங்களின் இயக்குநர் பா.இரஞ்சித்தின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

2012-ஆம் ஆண்டு ‘அட்டகத்தி’ என்ற சின்ன பட்ஜெட் படத்தை இயக்கி ஹிட் கொடுத்தவர் பா.இரஞ்சித். அந்த படத்தின் வெற்றியால் இயக்குநர் பா.இரஞ்சித்திற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து கார்த்தியுடன் ‘மெட்ராஸ்’, ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் ‘கபாலி, காலா’ என கூட்டணி அமைத்து சூப்பரான படங்களை கொடுத்தார்.

கடந்த ஆண்டு (2021) பா.இரஞ்சித் இயக்கிய ‘சார்பட்டா பரம்பரை’ OTT-யில் ரிலீஸாகி சூப்பர் ஹிட்டானது. இதில் ஹீரோவாக ஆர்யாவும், ஹீரோயினாக துஷாராவும் நடித்திருந்தனர். சமீபத்தில், இயக்குநர் பா.இரஞ்சித் ஒரு புதிய படத்தை இயக்க ஒப்பந்தமானார். இந்த படத்தில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவரான விக்ரம் நடிக்க உள்ளாராம்.

நடிகர் விக்ரம் – பா.இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் முதல் படம் இதுதானாம். இந்த படம் நடிகர் விக்ரமின் கேரியரில் 61-வது படமாம். இதனை ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்க உள்ளாராம். இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். மிக விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இயக்குநர் பா.இரஞ்சித்தின் சொத்து மதிப்பு ரூ.25 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Share.