தொடங்கிய “மகா சமுத்திரம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு!

நடிகர் சர்வானந்த் நடிப்பில் அடுத்து உருவாகவுள்ள “மகா சமுத்திரம்” எனும் படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கு நடிகை அனு இமானுவேல் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வந்தது.

அஜய் பூபதி இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் சர்வானந்த் உடன் நடிகர் சித்தார்த்தும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வந்தது.

இது மட்டுமின்றி ஏற்கனவே இந்த படத்தில் நடிப்பதற்கு நடிகை அதிதி ராவ் ஹைதாரி ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது, இதை தொடர்ந்து தற்போது இரண்டாவது ஹீரோயினாக அனு இமானுவேல் சேர்ந்துள்ளார்.

விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் அனு இமானுவேல். இந்த திரைப்படத்தை ஏகே என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

மேலும் காதல் கலந்த இந்த ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படத்தில் அதிதி ராவ் ஹைதாரி நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க உள்ளதாகவும், கிட்டத்தட்ட இந்த கதாபாத்திரம் ஒரு வில்லி கதாபாத்திரம் என்றும் தகவல் வந்துள்ளது.

இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவலை வெளியிட்டுள்ளார்கள்.

Share.