முதல் முறையாக ராஜமௌலி பற்றி வாய் திறந்த மகேஷ் பாபு !

பாகுபலி படம் மூலம் இந்திய முழுவதும் அறியப்பட்ட இயக்குனராக இருக்கிறார் ராஜமௌலி . பாகுபலி -1 மற்றும் பாகுபலி -2 ஆகிய படங்களின் வெற்றிலை பிறகு ராஜமௌலி இயக்கிய படம்
“ரத்தம் ரணம் ரௌத்திரம் ” . இந்த படத்தில் ராம் சரண் , ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் இணைந்து நடித்து இருந்தனர் . மேலும் சமுத்திரக்கனி , ஆலியா பட் , அஜய் தேவ்கான் ஆகியோர் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர் .இந்த படம் இந்திய முழுக்க மிக பெரிய வெற்றியை பெற்றுள்ளது .

இந்த வெற்றியை தொடர்ந்து நடிகர் மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்குகிறார் ராஜமௌலி .இந்த படம் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது இந்த படம் . பெருமபாலான படப்பிடிப்பு தென் ஆப்பிரிக்கா நாட்டில் நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது . புதையல் வேட்டையை மையமாக வைத்து இந்த படத்தை எடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது .தென் ஆப்ரிக்காவில் உள்ள காட்டு பகுதிகளில் இந்த படப்பிடிப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

இந்த நிலையில் சமீபத்தில் இதுகுறித்து பேசியுள்ள மகேஷ் பாபு ‛‛இயக்குனர் ராஜமௌலியின் ஒரு படத்தில் நடித்தால் அது 25 படங்களில் நடித்ததற்கு சமம். அந்த படத்திற்காக உடல் ரீதியாக நிறைய தயாராக வேண்டும். அவருடன் இணைந்து பணியாற்றும் நாளுக்காக நானும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Share.