‘தளபதி’ விஜய்யுடன் இணைந்து நடிக்க ஓகே சொன்ன தெலுங்கு ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபு… எந்த படத்துக்காக தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்திருந்தது. இதில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.

இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி ரிலீஸாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ‘பீஸ்ட்’-ஐ தொடர்ந்து விஜய்-யின் 66-வது படத்தை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இப்படத்தினை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்குகிறார். இதில் விஜய்-க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, சங்கீதா, யோகி பாபு, ஸ்ரீகாந்த், ஷாம், சம்யுக்தா ஆகியோர் நடிக்கின்றனர்.

இதற்கு தமன் இசையமைக்கிறார். சமீபத்தில், இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிவடைந்தது. மிக விரைவில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமாகவிருக்கிறது. தற்போது, இந்த படத்தில் தெலுங்கு ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபு கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. படத்தை அடுத்த ஆண்டு (2023) பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Share.