மாளவிகா மோகனன் ஹாலிடே ட்ரிப் புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களிடையே தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகை மாளவிகா மோகனன்.

2013 ஆம் ஆண்டு “பட்டம் போலே” என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன். பிரபல ஒளிப்பதிவாளர் கே.யூ.மோகனனின் மகளான இவர், தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “பேட்ட” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

சூப்பர்ஸ்டார் ரஜினி படத்தில் அறிமுகமான இவர், அடுத்து விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் “மாஸ்டர்” திரைப்படத்தில் தற்போது நடித்துள்ளார்.

இணையதளம் முழுவதும் மாளவிகா மோகனனுக்கென்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. மலையாள மொழிப்படத்தில் அறிமுகமான இவர் கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் தற்போது நடித்துள்ளார்.

தற்போது அரசு லாக்டோனில் சில தளர்வுகளை அறிவித்துள்ளதால் பலரும் வெக்கேஷன் செல்ல ஆரம்பித்து விட்டார்கள். இந்த வரிசையில் தற்போது கோவா சென்றுள்ள மாளவிகா மோகனன் அங்கு இயற்கை காட்சிகளோடு ஒன்றி புகைப்படங்களை வெளியிட்டு தன் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

https://www.instagram.com/p/CFrBYTsgPeU/?igshid=1gyn6a4cs8l3d

https://www.instagram.com/p/CFpA8ohgNWk/?igshid=1lwt6ysc6hxt5

https://www.instagram.com/p/CFmFtLHA1Kk/?igshid=8lg2lia2dlth

https://www.instagram.com/p/CFucQUAgkly/?igshid=187mtb0v2dyqs

https://www.instagram.com/p/CFr_SfYAmc-/?igshid=19pz3oiv5ge1h

https://www.instagram.com/p/CFeS6NkAFFU/?igshid=qci2zq2oqd1e

Share.