‘விஷால் 31’-ஐ இயக்கும் து.ப.சரவணன்… பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் பிரபல மலையாள நடிகர்!

சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் விஷால். இப்போது நடிகர் விஷால் நடிப்பில் ‘துப்பறிவாளன் 2’ மற்றும் ‘எனிமி’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், விஷால் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொன்னார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் து.ப.சரவணன் இயக்கி வருகிறார்.

இது விஷாலின் கேரியரில் 31-வது படமாம். இதில் விஷாலுக்கு ஜோடியாக ‘தேவி 2’ படம் மூலம் ஃபேமஸான டிம்பிள் ஹயாதி டூயட் பாடி ஆடி வருகிறார். டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இதற்கு கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இதனை விஷாலே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ மூலம் தயாரித்து கொண்டிருக்கிறார். கடந்த மே மாதம் 6-ஆம் தேதி இதன் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டு சில நாட்கள் நடைபெற்றது.

Malayala Actor To Play Villain Role In Vishal 311

பின், கொரோனா நோயின் இரண்டாவது அலை தாக்கம் அதிகமானதால் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி முதல் படத்தின் ஷூட்டிங்கை ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் மீண்டும் ஆரம்பித்துள்ளனர். இம்மாதம் (ஜூலை) இறுதிக்குள் மொத்த ஷூட்டிங்கையும் முடிக்க ப்ளான் போட்டுள்ளனர். தற்போது, இப்படத்தில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் நடிக்க பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.