விநியோகஸ்தரை ஏமாற்றிய முன்னணி நடிகர் !

2002-ஆம் வெளியான தமிழ் படத்தை இயக்கி கோலிவுட்டிற்கு அறிமுகமானவர் இயக்குனர் ஹரி . இதன் பிறகு சாமி , கோவில் , அருள் ,ஐயா , அருள், தாமிரபரணி , வேல் ,சிங்கம் , என பல படங்களை இயக்கியவர் ஹரி . இவர் நடிகர் சூர்யாவை வைத்து ஆறு , வேல் ,சிங்கம் , சிங்கம் 2 , சிங்கம் 3 என ஐந்து படங்கள் இயக்கி உள்ளார் . இந்த ஐந்து படங்களும் மிக பெரிய வெற்றிகளை குவித்தது .

இந்நிலையில் நடிகர் சூர்யாவை வைத்து இயக்குனர் ஹரி ஆறாவதாக ஒரு படம் இயக்க இருந்தார் ஆனால் ஏதோ சில காரணங்களால் அந்த படம் தொடங்காமல் போனது . இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா ஜெய் பீம் படத்தில் நடித்தார் . இயக்குனர் ஹரி நடிகர் அருண் விஜய்யை வைத்து படம் இயக்க தொடங்கினார் .

யானை என்ற தலைப்பை இந்த படத்திற்கு பெயர் வைத்தார் ஹரி. இந்த படத்தில் நடிகை ப்ரியா பவானி ஷங்கர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து இருக்கிறார் . ராதிகா சரத்குமார், சமுத்திரக்கனி, யோகி பாபு , ஆகியோர் இந்த படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர் .இந்த படத்தின் பாடல் , டீசர் , டிரைலர் என அனைத்தும் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் யானை படம் வருகின்ற ஜூலை 1-ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது . இதனிடையே யானை படத்தின் விளம்பரத்திற்காக மலேசியாவில் விநியோகஸ்தர் ஒருவர் மிகப்பெரிய ஏற்பாடு செய்துள்ளார். இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய்யின் ஒப்புதலோடு இந்த விழாவிற்கு பிரமாண்டமாக தமிழ்நாட்டு பாரம்பரியத்தின் படி ஏற்பாடு செய்து உள்ளார் அந்த விநியோகஸ்தர் . ஆனால் யானை படத்தின் ரிலீஸ் தேதி மாறிய காரணத்தால் இந்த விழாவில் இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் கலந்து கொள்ளவில்லை . விழாவை ஏற்பாடு செய்த விநியோகஸ்தர் போன் செய்தாலும் இருவரும் எடுப்பதில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது .

Share.