பூ கோலமிட்டு செவிலியர்களுக்கு நன்றி தெரிவித்த மாநாடு பட நடிகை!

2019ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் மித்ரன் இயக்கத்தில் வெளியான “ஹீரோ” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு ஹீரோயினாக அறிமுகமானவர் கல்யாணி பிரியதர்ஷன்.

பிரபல இயக்குனர் பிரியதர்ஷனின் மகளான இவர் தற்போது ஓணம் பண்டிகையை முன்னிட்டு, ஓணம் உடையை உடுத்தி பூ கோலமிட்டு அதில் தற்போது நோயாளிகளுக்கு உதவி வரும் செவிலியர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தனது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது “இந்த ஆண்டில் இடைவிடாது பணிபுரிந்து தங்களது தன்னலமற்ற பணியின் மூலம் கொரானா நோயாளிகளை காப்பாற்றி வீட்டுக்கு நலமுடன் அனுப்பிய செவிலியர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் “மாநாடு” திரைப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.