தன் தந்தைக்கு அழகாக வாழ்த்து கூறியுள்ள மஞ்சிமா மோகன்!

மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு தமிழில் 2016ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான “அச்சம் என்பது மடமையடா” திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக திரையுலகிற்கு அறிமுகமானவர் மஞ்சிமா மோகன்.

பிரபல ஒளிப்பதிவாளர் விபின் மோகனின் மகளான இவர், தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக 2019ஆம் ஆண்டு முத்தையா இயக்கத்தில் வெளியான “தேவராட்டம்” படத்தில் நடித்திருந்தார் மஞ்சிமா மோகன்.

இந்த படத்தில் தனது காலில் சிறிய அடிப்பட்டு ஆபரேஷன் செய்து படத்தில் நடிப்பதிலிருந்து தற்காலிகமாக ஓய்வெடுத்து வந்தார். தற்போது முழுமையாக குணமடைந்த மஞ்சிமா மோகன் F.I.R, துக்ளக் தர்பார், களத்தில் சந்திப்போம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இன்று தனது தந்தை விபின் மோகனின் பிறந்தநாளை ஒட்டி சிறுவயதில் தன் தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “என்னுடைய நண்பர் என்னுடைய பாதுகாப்பாளர் மற்றும் என்னுடைய தந்தை” என்று உணர்ச்சிவசமாக பதிவிட்டு தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Share.