‘பீஸ்ட்’ படத்தின் ‘அரபிக் குத்து’ பாடலுக்கு கவர்ச்சி நடனமாடிய ‘மன்மத லீலை’ ஹீரோ – ஹீரோயின்ஸ்!

கன்னட திரையுலகில் 2016-ஆம் ஆண்டு வெளியான படம் ‘கிரிக் பார்ட்டி’. இந்த படத்தை இயக்குநர் ரிஷப் ஷெட்டி இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோலில் நடித்திருந்தார் சம்யுக்தா ஹெக்டே. இது தான் இவர் அறிமுகமான முதல் கன்னட படமாம். இதனைத் தொடர்ந்து ‘காலேஜ் குமார்’ என்ற கன்னட படத்தில் ஹீரோயினாக நடித்தார் சம்யுக்தா ஹெக்டே.

அதன் பிறகு தமிழ் திரையுலகில் என்ட்ரியானார். தமிழில் ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘வாட்ச்மேன்’, ‘ஜெயம்’ ரவியின் ‘கோமாளி’, வருணின் ‘பப்பி’, அசோக் செல்வனின் ‘மன்மத லீலை’ போன்ற படங்களில் சம்யுக்தா ஹெக்டே நடித்தார். இவர் கன்னடம், தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மொழியிலும் ஒரு படத்தில் நடித்திருக்கிறார்.

இப்போது நடிகை சம்யுக்தா ஹெக்டே நடிப்பில் இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் ‘பீஸ்ட்’ என்ற படத்தின் ‘அரபிக் குத்து’ பாடலுக்கு நடிகைகள் சம்யுக்தா – ரியா சுமன், நடிகர் அசோக் செல்வன் இணைந்து சூப்பராக நடனமாடியுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Samyuktha Hegde (@samyuktha_hegde)

Share.