தொடை தெரிய போஸ்… ரசிகர்களை சுண்டி இழுக்கும் ‘மன்மத லீலை’ பட ஹீரோயின்!

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ரியா சுமன். இவருக்கு அமைந்த முதல் தெலுங்கு மொழி படத்திலேயே டாப் ஹீரோக்களில் ஒருவரான நானி தான் ஹீரோவாக நடித்திருந்தார். அந்த படம் தான் ‘மஜ்னு’. இந்த படத்துக்கு பிறகு நடிகை ரியா சுமனுக்கு அடித்தது ஜாக்பாட்.

இவரின் கால்ஷீட் டைரியில் தெலுங்கில் ‘பேப்பர் பாய்’, தமிழில் ‘சீறு, மலேஷியா டு அம்னீஷியா’ என படங்கள் குவிந்தது. சமீபத்தில், ரியா சுமன் நடித்து திரையரங்குகளில் ரிலீஸான படம் ‘மன்மத லீலை’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக அசோக் செல்வன் நடித்திருந்தார்.

மேலும், முக்கிய ரோல்களில் சம்யுக்தா ஹெக்டே, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் நடித்திருந்தனர். இப்போது ரியா சுமன் நடிப்பில் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ என்ற படம் உருவாகி வருகிறது. இதில் ஹீரோவாக சந்தானம் நடிக்க, இதனை இயக்குநர் மனோஜ் பீதா இயக்கி வருகிறாராம்.

இப்படம் தெலுங்கு திரையுலகில் 2019-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ படத்தின் ரீமேக்காம். இந்நிலையில், ரியா சுமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

 

Share.